டிஸ்ப்ளே மொழியை மாற்ற
டாப் செய்யவும்
www.bharatjodii.com ("வெப்சைட்") மற்றும் Jodii ("ஆப்") ஆகியவை ஆன்லைன் திருமண சேவைகளை வழங்கும் தளங்கள். Matrimony.com Ltd கீழ் இயங்கும் அனைத்து திருமண வெப்சைட்/ஆப்களுக்கும் இந்த தனியுரிமைக் கொள்கை பொதுவானது. உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம் என்பதால், உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் குறித்து இந்த கொள்கையில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
நீங்கள் உங்கள் தகவல்களை விருப்பத்துடன் வழங்குகிறீர்கள் என்பதை ஏற்கிறீர்கள். இந்த வெப்சைட்/ஆப்களை பயன்படுத்துவதன் மூலம் அல்லது உங்கள் தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப உங்கள் தகவல்களை சேகரிக்கவும் பயன்படுத்தவும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள். உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்படுவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்த வெப்சைட்/ஆப்களை பயன்படுத்த வேண்டாம்.
இந்த வெப்சைட்/ஆப்களை பயன்படுத்த என்ன தகவல்கள் தேவை?
எங்கள் வெப்சைட்/ஆப்களில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் மெம்பர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து சில தகவல்கள் சேகரிக்கப்படலாம். அவை பயனரின் போட்டோ, இமெயில் முகவரி, பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, பயனர் கொடுக்கும் பாஸ்வேர்ட், அஞ்சல் முகவரி, பின் கோடு, தொலைபேசி/மொபைல் எண் அல்லது ஃபேக்ஸ் எண் போன்றவற்றை உள்ளடக்கலாம். தேவையின் அடிப்படையில் மேலும் சில தகவல்களும் கேட்கப்படலாம்.
குக்கீஸ் மற்றும் ட்ராக்கிங் தொழில்நுட்பங்கள்
கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் போது பயனர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாக்க நாங்கள் பாதுகாப்பான சர்வரை பயன்படுத்துகிறோம். லாகின் தகவல்களை சேமிக்க குக்கீஸ் பயன்படுத்தப்படுகின்றன. குக்கீஸ் என்பது உங்கள் ஹார்ட் டிரைவில் வைக்கப்படும் சிறிய ஃபைல்கள். எங்கள் சேவைகளை சிறப்பாக வழங்க இவை உதவுகின்றன.
வெப்சைட்/ஆப்களின் சில பக்கங்களில் மூன்றாம் தரப்பினரால் வைக்கப்படும் குக்கீஸ் அல்லது அதுபோன்ற ட்ராக்கிங் கருவிகளையும் நீங்கள் பார்க்கலாம். மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தும் குக்கீஸை நாங்கள் கட்டுப்படுத்துவது இல்லை.
கட்டணம் மற்றும் பில்லிங் தகவல்கள்
எங்கள் கட்டண சேவைகளுக்காக நீங்கள் கிரெடிட் அக்கவுண்ட் உருவாக்கினால், பில்லிங் முகவரி, கிரெடிட்/டெபிட் கார்டு எண், கிரெடிட்/டெபிட் கார்டு காலாவதி தேதி, காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் தொடர்பான ட்ராக்கிங் தகவல்கள் போன்ற கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்படலாம்.
பதிவு மற்றும் பயன்பாட்டின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள்
நாங்கள் சேகரிக்கும் பயனர் தகவல்கள், நீங்கள் எங்களுடன் மற்றும் எங்கள் வெப்சைட்/ஆப்களுடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள், நீங்கள் செய்யும் தேர்வுகள், நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்த பயனர் தகவல்கள் அங்கீகாரம் மற்றும் அக்கவுண்ட் அணுகலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு பயனர் Facebook, Google, LinkedIn போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்தால், அந்த தளங்களின் APIs மூலம் நீங்கள் அணுக அனுமதிக்கும் தனிப்பட்ட டேட்டாவை நாங்கள் சேகரிக்கலாம். பயனர் எங்கள் வெப்சைட் அல்லது ஆப்களை பயன்படுத்தும்போது, டிவைஸ் ஐடி, லாக் ஃபைல்கள், இருப்பிட தகவல், டிவைஸ் தகவல்/விவரங்கள் போன்ற டேட்டாவும் தானாக சேகரிக்கப்படலாம்.
அனலிடிக்ஸ் மற்றும் பயன்பாட்டு தகவல்கள்
டேட்டா அனாலிசிஸ், பயன்பாட்டு டிரெண்ட்ஸ், வெப்சைட்/ஆப் மேம்பாடு, மார்க்கெட்டிங் ரிசர்ச் மற்றும் மோசடி தடுப்பு போன்ற காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்த, பயனர்கள் எங்கள் வெப்சைட்/ஆப்களில் செய்யும் செயல்பாடுகள் தொடர்பான டெமோகிராஃபிக் மற்றும் ப்ரொபைல் டேட்டாவை சேகரித்து ஆய்வு செய்கிறோம்.
எங்கள் சர்வரில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறியவும், வெப்சைட்/ஆப்களை நிர்வகிக்கவும் உங்கள் ஐ.பி. (IP) முகவரியை நாங்கள் அடையாளம் கண்டு பயன்படுத்தலாம். உங்களை அடையாளம் காணவும், பொதுவான டெமோகிராஃபிக் தகவல்களை சேகரிக்கவும் ஐ.பி. (IP) முகவரி பயன்படுத்தப்படலாம்.
சேகரிக்கப்பட்ட/ட்ராக் செய்யப்பட்ட தகவல்களை வெப்சைட்/ஆப்கள் எப்படி பயன்படுத்துகின்றன?
www.bharatjodii.com உங்கள் தேவைகளை சிறப்பாக புரிந்து கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக தகவல்களை சேகரிக்கிறது. இந்த தகவல்கள் டேட்டா அனாலிசிஸ், பயன்பாட்டு டிரெண்ட்ஸை கண்டறிதல், புரொமோஷனல் காம்பெயின்களின் செயல்திறனை மதிப்பிடுதல், வெப்சைட்/ஆப்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல், மார்க்கெட்டிங் ரிசர்ச் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய (EU) மெம்பர்களுக்காக
நீங்கள் EU-வில் இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க, செயலாக்க மற்றும் பகிர உங்கள் ஒப்புதல் கேட்கப்படும். தனிப்பட்ட தகவல் என்பது அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய நபருடன் தொடர்புடைய எந்த தகவலாகவும் இருக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பார்க்கவும் அணுகவும் உங்களுக்கு உரிமை உள்ளது. எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை பகிர்வதற்கான ஒப்புதலை திரும்பப் பெறவும் உங்களுக்கு உரிமை உள்ளது. பொருந்தும் சட்டங்களுக்கு உட்பட்டு, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்க கோரவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
எங்களை தொடர்பு கொண்டு உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இந்தியா உட்பட EU-க்கு வெளியே உள்ள டேட்டாபேஸ்களில் சேமிக்கப்படலாம். EU-க்கு வெளியே தனிப்பட்ட டேட்டாவை மாற்றும்போது, போதுமான பாதுகாப்பு அளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே தகவல்களை மாற்றுவோம் அல்லது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த உரிமைகளை செயல்படுத்துவதற்கு முன், உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய ஆதாரம் கேட்கப்படலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பார்க்க, புதுப்பிக்க அல்லது நீக்க கோரிக்கை செய்ய, support@jodii.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதலாம். மோசடிகள் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களை பாதுகாக்க, UK-வில் உள்ள மோசடி தடுப்பு சேவை வழங்குநர்களுடன் உங்கள் தகவல்களை பகிரலாம்.
சேகரிக்கப்பட்ட/ட்ராக் செய்யப்பட்ட தகவல்களை வெப்சைட்/ஆப்கள் யாருடன் பகிர்கின்றன?
இணை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் பகிர்வு
அடையாளம் காணக்கூடிய சில தகவல்களை எங்கள் அசோசியேட்ஸ், இணை நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களுடன் பகிரலாம். இந்த பகிர்வின் அடிப்படையில் அவர்கள் உங்களை மார்க்கெட்டிங் தொடர்பான விஷயங்களுக்கு அணுகலாம்.
மேலும், சரிபார்ப்பு மற்றும் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக, Matrimony.com Limited (MCL) மற்றும் அதன் சேவை வழங்குநர்கள் உங்கள் தகவல்களை சேகரிக்க, பிரித்தெடுக்க மற்றும் செயலாக்க உங்கள் வெளிப்படையான ஒப்புதலை நீங்கள் வழங்குகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கும் எந்த தகவலும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் கையாளப்படும்.
சட்ட மற்றும் ஒழுங்குமுறை தகவல் பகிர்வு
சட்டம் அல்லது சட்ட நடைமுறையின் அடிப்படையில் ஒரு வாடிக்கையாளர் அல்லது பார்வையாளர் குறித்த தகவல்களை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நாங்கள் அதற்கேற்ப முழுமையாக ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சட்டம் அனுமதிக்கும் அல்லது கோரும் இடங்களில், ரெகுலேட்டர்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் அல்லது பிற மெம்பர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமை, சொத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்பை காக்கும் நோக்கத்திற்காக தகவல்கள் வழங்கப்படலாம். ஒரு பரிவர்த்தனை சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், சட்ட அமலாக்க அமைப்புகள், கேட்வே சேவை வழங்குநர்கள் அல்லது மோசடி தடுப்பு சேவை வழங்குநர்களுடன் உங்கள் தகவல்களை நாங்கள் விருப்பத்துடன் பகிரலாம்.
வணிக மாற்றங்கள் மற்றும் கார்ப்பரேட் நடவடிக்கைகள்
சில நேரங்களில் இணைப்பு, கையகப்படுத்தல், மறுசீரமைப்பு, சொத்து விற்பனை போன்ற கார்ப்பரேட் நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கலாம். அத்தகைய சூழல்களில், அந்த நடவடிக்கையை மதிப்பிடவும் மேற்கொள்ளவும் தகவல்களுக்கு அணுகல் வழங்கப்படலாம் அல்லது தகவல்கள் மாற்றப்படலாம். நாங்கள் எந்த வணிகம் அல்லது சொத்துகளை வாங்கினாலும் விற்றாலும், அந்த பரிவர்த்தனையில் தொடர்புடைய மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட தகவல்கள் மாற்றப்படலாம்.
மூன்றாம் தரப்பு வெப்சைட்கள் மற்றும் ஆப்கள்
எங்கள் வெப்சைட்/ஆப்களில், உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கக்கூடிய பிற வெப்சைட்கள் அல்லது ஆப்களுக்கு லிங்குகள் இருக்கலாம். அந்த லிங்க் செய்யப்பட்ட வெப்சைட்கள் அல்லது ஆப்களின் தனியுரிமைக் கொள்கைகள் அல்லது உள்ளடக்கங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
உங்கள் தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயனர்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களை கீழே உள்ள சூழல்களில் நாங்கள் வைத்திருக்கலாம்.
பயனர்கள் எங்கள் சேவைகளுக்கு சந்தா வைத்திருக்கும் காலம் வரை, தகவல்கள் சேகரிக்கப்பட்ட பொருத்தமான நோக்கம் நிறைவேறும் வரை, ஒப்பந்தங்களை அமல்படுத்த, ஆடிட் செய்ய, விவாதங்கள் அல்லது பிரச்சனைகளை தீர்க்க, சட்ட பாதுகாப்புகளை உருவாக்க, நியாயமான வணிக நலன்களை பாதுகாக்க மற்றும் பொருந்தும் சட்டங்களை பின்பற்ற தேவையான காலம் வரை தகவல்கள் சேமிக்கப்படலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன?
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க, அமைப்பு சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் செயலாக்கும் எந்த தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பையும் காக்க, பொருத்தமான உள்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், இணையம் 100% பாதுகாப்பானது என்று எங்களால் உறுதி அளிக்க முடியாது என்பதை வைக்க வேண்டும். உங்கள் தகவல்கள் எங்கள் வசம் வந்த பிறகு, அனுமதியில்லாத அணுகலிலிருந்து அவற்றை பாதுகாக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுகிறோம்.
இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்
இந்த தனியுரிமைக் கொள்கையை முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மாற்றலாம். எந்த மாற்றங்களும் தனியுரிமைக் கொள்கை பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.
உங்கள் குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?
குறைதீர் அதிகாரி விவரங்கள்
பெயர்: Mr. Ajeeth Doss
முகவரி: Matrimony.com Limited, 94, TVH Beliciaa Towers, Tower 2, 5th Floor, MRC Nagar, Chennai 600 028.
இமெயில்: grievanceofficer@matrimony.com
குறைதீர் அதிகாரியை தொடர்பு கொள்ளும் நேரம்
குறைதீர் அதிகாரியை இந்திய நேரப்படி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திங்கள் முதல் சனி வரை தொடர்பு கொள்ளலாம். ஞாயிறு மற்றும் இந்தியாவில் உள்ள பொது விடுமுறை நாட்கள் இதில் சேராது.
ஒழுங்குமுறை இணக்கம்
Information Technology (Reasonable Security Practices and Procedures and Sensitive Personal Data or Information) Rules, 2011-ன் Section 5(9)-ன் படி குறைதீர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.